states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் பாந்தவ்கர் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த புலிகள்  காப்பகத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 10 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க அரசு கொல்கத்தாவில் உள்ள 5 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் சரக்கு ரயி லில் அடிபட்டு யானை உயிரிழந்தது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய  அம்மாநில அதிகாரிகள் தவறியதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“கர்நாடகாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் கன்னட முத்திரையை சேர்க்க நடவடிக்கை எடுக் கப்படும்” என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

தில்லி மாநிலத்தைப் போன்று இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தூர் மாவட் டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அடித்துக் கொன்றனர்.

கடந்த அக்டோபர் மாதத்தில் பெண்கள் மட்டும் பய ணிக்கும் ரயில் பெட்டிகளில் பயணம் செய்த தற்காக 1,400க்கும் மேற்பட்ட ஆண் பயணிகள் கைது செய்யப்பட்டனர் என கிழக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.