states

img

ஓவியம் - சிற்பக் கலையில் சாதணைப் படைத்த கலைச் செம்மல் விருது அறிவிப்பு

சென்னை,அக்.03- தமிழ்நாடு அரசின் ‘கலைச் செம்மல்’ விருதுக்கு ஓவியம், சிற்பக் கலையில் சாதனைப் படைத்த 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நுண்கலைத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்குக் கலை செம்மல் விருது வழங்கப்படுகிறது. 
இந்நிலையில் 2024-2025ஆம் ஆண்டுக்கான கலைச் செம்மல் விருதுக்கு ஓவியம், சிற்பக் கலையில் சாதனைப் படைத்த 6 பேரைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, மரபுவழி ஓவியப் பிரிவில், ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீன ஓவியப் பிரிவில் கே.முரளிதரன் மற்றும் ஏ.செல்வராஜ், நவீன சிறபப் பிரிவில் ரா.ராகவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.