கோவை ஈசாவிலுள்ள பள்ளியில் கல்வி பயின்ற தனது மகனுக்கு 3 ஆண்டுகளாக பாலி யல் தொல்லை அளிக்கப்பட்ட சம்ப வம் குறித்து, பாதிக்கப்பட்டவரின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண், கோவையிலுள்ள ஈசா யோகா மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், அவரது கணவர் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி வந்துள்ளார். ஜக்கி வாசுதேவின் உரைகளை கேட்டு ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த அந்த பெண், கடந்த 2013 ஆம் ஆண்டு ஈஷா யோகா மையத்துடன் நேரடியாக பல்வேறு களப்பணி யில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அவர் தன் மகனை ஈசா யோகா மையத்தில் இயங்கும் பள்ளியில் சேர்த்துவிட்டுள்ளார். அங்கு அவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில், தனது மகன் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, மாணவர் ஒரு வரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய தாக, அவரது தாயார் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த பொருளாதாரத்தில் வலிமையான குடும்ப பின்னணியில் உள்ள ஒரு சிறுவன், தன் மகனை 3 வருடங்களாக நள்ளிர வில் துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அப்பள்ளி நிர்வாகத்திடம் சிறுவன் தெரி வித்தும், நடவடிக்கை எடுக்கப்படாமல், சிறு வனை ஈசா யோகா மையத்தினர் ஒரு வாரம் தங்கள் கஸ்டடியில் வைத்துள்ளனர். இக்கால கட்டத்தில் தன் மகன் கடும் மன உளைச்ச லாலும், உடல் ரீதியாகவும் பாதிக்கப் பட்டுள்ளார். இதனிடையே ஈசா யோகா மையத்தில் தன் மகனுக்கு நேர்ந்த அவலம் தெரியவந்த பொழுது, பள்ளி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஈஷா யோகா பள்ளி நிர்வாகத் தரப்பு, நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட போலீசில் ஆன்லைன் மூலமாக ஹைதராபாத்தில் இருந்து அப்பெண் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலையம், பேரூர் காவல் துறையினர் அப்பெண்ணுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்பேரில், சனியன்று அவர் தன் மகனுடன் போத்தனூர் பகுதியில் உள்ள அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
ஜக்கி வாசுதேவ் உடந்தை?
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், தன் மகன் மட்டும் இன்றி, தன் மகனைப் போன்று பலருக்கும் ஈசா யோகா மைய வளாகத்தில் இயங்கும் பள்ளியில், அத்துமீறல்கள் நடந்திருக்கிறது. நானும், என் கணவரும் ஈசா யோகா மைய வளாகத்தி ற்குள் சென்ற பிறகு, அங்கு இதுபோன்ற அத்து மீறல்கள் நடந்திருப்பது, பெரிய குற்றங்கள் நாள்தோறும் நடப்பது தெரியவந்தது. குழந்தை களுக்கு ஏற்ற சரியான இடம் ஈஷா யோகா மைய வளாகத்திலே இயங்கும் பள்ளி அல்ல. ஜக்கி வாசுதேவுக்கு என் மகனுக்கு நடந்த அத்து மீறல்கள் குறித்து தெரிய வந்த பிறகும், நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பதால், அவர் இதனை மறைமுகமாக ஊக்குவிக்கி றாரா? என்று கேள்வி எழுகிறது. பெண்கள் பாலி யல் அத்துமீறலுக்கு எதிராக கொல்கத்தாவில் பேசும் ஜக்கி வாசுதேவ், தனது ஈசா யோகா மைய வளாகத்தில் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் உள்ளிட்டவை குறித்து வாய் திறக்கா மல் இருப்பதற்கு காரணம், இதற்கெல்லாம் அவர் உடன்படுகிறாரா? தனது மகனுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பொதுவெளி யில் பேசியபோது, கொலை மற்றும் பாலியல் மிரட்டல் பகிரங்கமாக வந்தது.
எங்கே போனார் அண்ணாமலை?
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாண விக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் குறித்து பேசும் மற்றும் கோவையை சொந்த பகுதியாக நினைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையிலுள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில் நடக்கும் அத்து மீறல்கள் குறித்தும் பேச வேண்டும். பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் களை போலீசில் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை சட்ட விதி மட்டுமின்றி, சட்டங்கள் எதையும் அவர்கள் மதிக்கவில்லை என்றார்.