states

img

துரைமுருகன் மகன் கல்லூரியில் 2-ஆவது நாளாக சோதனை!

வேலூர் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி யில் 24 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து சனிக்கிழமை இரண்டாவது நாளாக அம லாக்கத்துறை சோதனை நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட் பாடி அடுத்த கிருஸ்டியான் பேட்டையில் கதிர் ஆனந்து க்குச் சொந்தமான கிங்ஸ்டன்  பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஜனவரி 3 அன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை துவங்கினர். இந்தச் சோதனை 24 மணி நேரத் தைக் கடந்து 2-ஆவது நாளாக தொ டர்ந்தது. இதில் 18-க்கும் மேற்பட்ட அமலாக் கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கல்லூரி லாக்கரில் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டு எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மூலம் வாகனத் தில் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியா னது. முன்னதாக அமைச்சர் துரைமுருகன், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீட்டில் சோதனை நடைபெற்றது.  அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர் புரத்தில் வசித்து வருகிறார். அவரது மகன் கதிர் ஆனந்த் வேலூரில் வசித்து வருகிறார். அவர் தற் போது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இந்நிலையில், கதிர் ஆனந்த் இல்லாத நிலை யிலேயே அவரது வீடு மற்றும் கல்லூரியில் அம லாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரு கின்றனர்.