states

img

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல்

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல் 

2022ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்டார். இவரது அமைச்சரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் சிங் தலிவால் வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2023ஆம் ஆண்டு பஞ்சாப் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப் பட்டது. இந்த மறுசீரமைப்பில் குல்தீப் சிங்கிற்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத் துறையுடன் (என்ஆர்ஐ), நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு மாற்றப் பட்டார். இந்நிலையில், பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் அமைச்சர்களின் துறை இலாகா குறித்த திருத்த அறிக்கையை வெளியிட்டார். அதில் நிர்வாகச் சீர் திருத்தம் என்ற பெயரில் ஒரு துறையே இல்லை என்றும், ஆனால் அந்த துறை யில் அமைச்சராக குல்தீப் சிங் பணி யாற்றியுள்ளார் என்றும் கூறப்பட்டுள் ளது. இந்த விவகாரம் ஊழல், முறை கேடுக்கு ஒப்பானது என காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

குல்தீப் சிங் வெளிநாடுவாழ் இந்தி யர்கள் விவகாரத்துறையை கவனித்தது உண்மை தான். சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர் கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். இந்தியர்களை அவரவர் சொந்த மாநிலத்தில் ஒப்ப டைக்கும் பொறுப்பை குல்தீப் சிங் தான்  கவனித்தார். ஆனால் நிர்வாகச் சீர்திருத்த துறை பஞ்சாப் அமைச்சரவை யில் ஒரு துறையாக இல்லை. அத னால் இதுவரை அறியப்படாத சர்ச்சை யில் அவர் சிக்கியுள்ளார்.