states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் 2023-24ஆம் ஆண்டுக்கான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் ரூ.70,878 கோடி முறைகேடு நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளுக்கும் பஹல்காம் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீநகர் அருகே “ஆப்ரேஷன் மகாதேவ்” என்ற பெயரில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.