கேரள அமைச்சர் ஆர்.பிந்து
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் துணைவேந்தர்கள் கலந்து கொண்டது கண்டனத்துக்குரியது. தற்போதைய உலகுக்கு உகந்த நவீன கல்வி முறையை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளாது. ஆர்எஸ்எஸ்ஸின் ஞான சபை நிகழ்ச்சி, அறிவு சார்ந்த சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சி ஆகும். கல்வி முறையை இந்துத்துவா கட்டமைப்புக்கான கருத்தியல் மேடையாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்.
திமுக எம்.பி., திருச்சி சிவா
பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் மிகவும் அரிதாகவே நாடாளுமன்றத்திற்கு வருகிறார். பொறுப்பு மிக்கவர்கள் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வருகிறார்கள். நாடாளுமன்றம் நாளுக்கு நாள் வலு விழந்து வருகிறது. ஆனால் நாங்கள் (எதிர்க்கட்சி கள்) ஜனநாயகத்தை மீட்டெடுக்க விரும்புகிறோம்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி
இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சொன்னது உண்மையல்ல என சமூகவலைதளத்தில் மோடி பதிவிடலாமே. டிரம்ப்புக்கு முன்னால் நீங்கள் சென்று நின்றதுமே உங்களின் (மோடி) உயரம் 5 அடியாக குறைந்து விடுகிறது. உங்களின் மார்பளவு 56 அங்குலத்திலிருந்து 36 அங்குலமாக குறைந்து விடுகிறது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
ஊடகங்களுக்கு முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன். ஊடகங்கள் மோடியை ஒரு பலூன் போல ஊதி பெரிதாக்கி வைத்திருக்கின்றன. பலூனில் காற்று போனால், ஒன்றுமில்லாமல் பலூன் கீழே விழுந்து விடும். இதனை ஞாபகம் வைத்து இருக்க வேண்டும்.