states

img

தியாகி கர்தார் சிங்கின் இல்லத்தில்...

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  பஞ்சாப் மாநில கவுன்சில் கூட்டம் லூதியானாவில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, அசோக் தாவ் லே, பி.கிருஷ்ண பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் லுதியானா மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சரபா கிராமத்திற்குச் சென்றனர். இங்குதான் கதார் கட்சியின் தியாகி ஷஹீத் கர்தார் சிங் சரபாவின் பூர்வீக வீடும் நினைவிடமும் உள்ளது. 1896 மே 24 அன்று பிறந்த கர்தார் சிங், 1915 நவம்பர் 16 அன்று வெறும் 19 வயதில் லாகூர் சிறையில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். பகத் சிங் அவரை தனது ஹீரோவாகக் கருதி, அவரது புகைப்படத்தை தன் பாக்கெட்டில் வைத்திருந்தார். கர்தார் சிங்கின் பூர்வீக வீட்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல தியாகிகளின் படங்களும், அவர்களைப் பற்றிய சுருக்கமான தகவல்களும் உள்ளன. கிராமத்தின் நான்கு வழிச் சந்திப்பில் ஷஹீத் கர்தார் சிங் சரபாவின் சிலையும் நினைவிடமும் உள்ளது.