states

img

திருச்சூர் ஏடிஎம் கொள்ளையர்களிடம் கேரள போலீசார் விசாரணை

திருச்சூரில் 3 இடங்களில் நடந்த  ஏடிஎம் கொள்ளை வழக்கில்,  குற்றவாளிகளை தமிழக சிறையில் இருந்து கேரள போலீ சார் காவலில் எடுத்தனர்.

இவர்கள் திருச்சூரில் கொள்  ளையடித்து விட்டு தப்ப முயன்ற னர். தமிழகத்தில் ஈரோடு அருகே  பள்ளிப்பாளைத்தில் காவ லர்களை கொல்ல முயன்று கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்  கப்பட்டிருந்த ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த  முஹம்மது இக்ராம், தெக்சில்  இர்பான், முபாரக் ஆதம், சபீர்  கான், சவுக்கீன் ஆகியோரை திருச் சூர் கிழக்கு காவல்துறையினர் (அக்.5) வெள்ளியன்று காவலில் எடுத்து, திருச்சூருக்கு அழைத்து வநதனர்.

இந்த கொள்ளைக்கு மூளை யாக செயல்பட்ட முஹம்மது இக் ராம், முன்னதாக திருச்சூர் வந்து கொள்ளையடிக்க வேண்டிய ஏடிஎம்களை கூகுள் மேப்ஸ் மூலம்  கண்டுபிடித்தார். சேர்ப்பு என்னும்  இடத்தில் உள்ள ஏ.டி.எம்-ஐ  கொள்ளையடிக்கவும் திட்டமிட்ட னர். ஆனால் வங்கியின் பாதுகாப்பு  அமைப்புகளால் இது நடக்க வில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஏடிஎம் கொள்ளை யர்கள் சேலம் மத்திய சிறையில் இருந்து வெள்ளியன்று காலை  9.30 மணிக்கு கேரள காவல்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் சிறப்பு போலீஸ் வேனில் மதியம் 2:30 மணி யளவில் திருச்சூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

திருச்சூர் கிழக்கு காவல்துறை யைத் தொடர்ந்து, ரூரல் போலீஸா ரும் குற்றவாளிகளைக் காவலில் எடுப்பார்கள். மாபிராணத்தில் நடந்த கொள்ளை வழக்கில்  குற்றவாளிகளை இரிங்காலக்குடா  போலீசாரும், கோலாசியில் நடந்த கொள்ளை வழக்கில் வியூர் போலீ சாரும் காவலில் எடுத்து விசாரிக்க  உள்ளனர். கன்டெய்னர் லாரி ஓட்டு நர் ஜுமாலுதீன் (37) கொள்ளை  கும்பலுக்கும் காவல்துறையின ருக்கும் இடையே நடந்த என் கவுண்டரில் கொல்லப்பட்டார், அவ ரது உதவியாளர் ஹரியானாவைச் சேர்ந்த அசர் அலி (30) என்பவரின் கால் துண்டிக்கப்பட்டது. சிகிச்சை  பெற்று வரும் அசார் அலியிடமும் பின்னர் விசாரணை நடத்தப்படும்.

தமிழகத்தில் போலீசாரை கொல்ல முயன்ற வழக்கு மட்டு மின்றி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட நாட்டில் நடந்த ஏடிஎம் கொள்ளை  வழக்குகளிலும் சந்தேக நபர்களு டன் இவர்கள் தொடர்புடைய வர்கள் என கருதப்படுகிறது.