states

img

புதுவையில் விசைப்படகு உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரி, அக். 26- புதுவை பெரிய மார்க்கெட் பகுதி யில் வெளிமாநில மீன்களை கொண்டு வந்து விற்க 9 ஏn ஜன்சிக ளுக்கு மீன்வளத்துறை அனுமதி அளித்ததாக தெரிகிறது. புதுவையில் 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் புதுவை பெரிய மார்க்கெட், சின்னகடை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங் குப்பம், வீராம்பட்டினம் போன்ற சிறிய மார்க்கெட்டில் விற்பனை செய்வது வழக்கம். சமீபகாலமாக புதுவையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 9 ஏn ஜன்சி மூலம் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து விசைப்படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தை பூட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். படகு களை துறைமுகத்தில் நிறுத்தி விட்டு வெளிமாநில மீன்கள் வரத்தை நிறுத்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என எச்சரித்துள்ளனர். மேலும் 9 முகவர்கள் மூலம் வெளிமாநிலங்களிலிருந்து புதுவைக்கு மீன்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள மீன்வளத்துறைக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து மீன் வரு வதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.