மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் “இந்தியா கேட்” அருகே புதன்கிழமை மாலை “நீல்கமல்” என்ற பயணிகள் கப்பல் கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர்.
இந்நிலையில், பயணிகள் படகில் பயணம் செய்த கோவாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஜோகனின் சடலம் சனிக்கிழமை அன்று மீட்கப்பட்டது. இதன்மூலம் மும்பை படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.