states

img

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

மணிப்பூரில் கடந்த ஆண்டு பிப்.13 முதல் அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சியை திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் பாஜகவின் தூண்டுதலால் குக்கி - மெய்டெய் சமூகத்துக்கு இடையே வன் முறை வெடித்தது. இந்த வன்முறையால் பாஜக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமான அஜய் குமார் பல்லா  மணிப்பூர் ஆளுநராக உள்ள நிலையில், அவர் குடியரசுத் தலைவர் ஆட்சியை கவனித்து வருகிறார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்திய பொழுதிலும் மணிப்பூரில் வன்முறை இல்லாத நாட்களே இல்லாத சூழல் இருந்தது. இந்த நிலையில், நேற்று தில்லியில் மணிப்பூர் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜ.க-வின் சட்டமன்ற தலைவராக ஒய்.கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். 
இதை தொடர்ந்து மாணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமை கோரி முன்னாள் அமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங் தலைமையிலான என்டிஏ குழு, அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து கடிதம் வழங்கியது. இதனை தொடர்ந்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.