மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"எதிர்க்கட்சித் தலைவரும், என் சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?
அரசு, அவை உறுப்பினர்களுக்குப் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும், மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.
எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமை மீட்டெடுக்கப்படுவதற்காக, அந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் நான் கோருகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
