states

img

மணிப்பூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், அன்மையில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. இந்த சூழலில், மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், பிஷ்ணுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி 3 மணி முதல் 5 நாட்களும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.