மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக 3ஆவது முறையாக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. இந்த சூழலில், புதிய ஆட்சி அமைப்பதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காபந்து முதல்வராக அவர் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்துள்ளதாகவும், இதனால் ஏக்நாத் ஷிண்டே தரப்பு அதிருப்தியில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறன.
இந்த சூழலில், மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக 3ஆவது முறையாக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.