போபால்:
புதிதாக பதவியேற்ற 39 ஒன்றிய அமைச்சர்களை மக்களுக்கு அறிமுகப் படுத்துவதாக கூறி, பாஜக-வினர் நடத்திவரும் ‘ஆசிர்வாத் யாத்திரை’ தொடர்சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. பாஜகதலைவர்கள் பேசும் பிரிவினைவாதக் கருத்துக்கள், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துவதாக அமைந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற யாத்திரையின்போது பேசிய ஒன்றிய சிறுபான்மை நலத்துறை இணையமைச்சர் ஜான் பர்லா, மேற்கு வங்கத்தைப் பிரித்துதனியாக வடக்கு வங்க மாநிலத்தை உருவாக்குவேன் என்று பதற்றத்தை ஏற்படுத்தினர்.கர்நாடகத்தில் நடைபெற்ற யாதகிரிஎரகொளேவில் நடைபெற்ற யாத்திரையில், ஒன்றிய அமைச்சர் பகவந்த் கூபாவுக்கு துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவுமிக்கிற்கு நடந்த பாராட்டு விழாவில், “பாஜக-வைஎதிர்ப்போரை தலிபான் பாணியில் தாக்குவோம்; ரத்தம் சிந்துவோம்” என்று பாஜகஎம்எல்ஏ அருண் சந்திர பவுமிக் கொலைவெறிக் கூச்சல் போட்டார்.இந்நிலையில்தான், மத்தியப் பிரதேசமாநிலம் இந்தூரில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, குதிரையின் உடல் முழுவதும் பச்சை, காவி வண்ணத்தில் பாஜககொடி வரைந்து துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது.இதுதொடர்பாக, ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ (People for Animals) என்றதன்னார்வ அமைப்பு இந்தூரின் சன்யோகித கஞ்ச் காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளது. விலங்குகள் சித்ரவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாஜக-வினர்மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் எனஅப்புகாரில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்க‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ முடிவு செய் துள்ளது.பாஜக முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான மேனகாகாந்தி-தான் ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ அமைப்பின் தலைவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.