states

img

மத்தியபிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் சதி மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே இன்று காலை பேருந்து பாலத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளனர்.  இந்த விபத்தில் சிக்கிய 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்ட சிவராஜ் சிங் சவுகான், 

“ நடந்த சம்பவம் மிகவும் துயரமானது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய இரண்டு அமைச்சர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மாநிலமும் உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.