பழைய இரும்புக்கடையில் உடைப்பதற்க்காக ஏராளமான சமையல் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மத்தியப்பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் உடைப்பதற்க்காக ஏராளமான சமையல் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிலிண்டர்களில் உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்பட்டது என எழுதப்பட்டுள்ளது.
சமையல் சிலிண்டர் விலை கடும் விலை ஏற்றம் காரணமாக சிலிண்டர் வாங்க முடியாத ஏழைக் குடும்பத்தின் பயணாளிகள் சிலிண்டரை இரும்பு விலைக்கு விற்பனை செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான கமல்நாத், இரும்புக் கடையில் சிலிண்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் இரும்புக்கடையில் குவிக்கப்பட்டிருக்கும் சமையல் சிலிண்டர்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வைக் காட்டுகின்றன. ஜபல்பூரில் ஒரு மாதத்துக்கு முன்புதான், மத்திய மந்திரி அமித் ஷா உஜ்வாலா திட்டத்தின் இரண்டாவது பகுதியை தொடங்கிவைத்தார் அதற்குள் இந்த நிலைமை என கூறியுள்ளார்.