போபால்:
தங்கள் வீட்டின் முன்பு கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்துக் கேட்டதற்காக, தலித் குடும்பம் மீது சாதிஆதிக்க வெறியர்கள் கொடூரமானமுறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டம் ஜவார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் ஹரிநாத் சிங் மற்றும்அவரது மகன் சோபால்சிங் சோலங்கி. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர்களுக்கு அண்மையில் ம.பி. அரசு சார்பில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வீடு கட்டுவதற்காக, ஹரிநாத் சிங் செங்கற்களை கொண்டுவந்து அடுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.ஆனால், அந்த ஊரில் உள்ள சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்கள் மீது மாட்டுச்சாண கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டியுள்ளனர். இதனை ஹரிநாத் சிங்கும், மகன்சோபால் சிங் சோலங்கியும் எதிர்த்துக்கேட்டுள்ளனர்.
அதற்கு நாங்கள் வழக்கமாக மாட்டுச் சாணக் கழிவுகளை இங்குதான் கொட்டுவோம்... இனியும் அப்படித் தான் கொட்டுவோம்... நீதான்செங்கற்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி சாதியைச் சொல்லி திட்டி இழிவுபடுத்தி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹரிநாத் சிங், சோபால் சிங்ஆகியோரை மட்டுமன்றி, வீட்டிலிருந்த பெண்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர்.இந்த தாக்குதலில் ஹரிநாத் சிங்மற்றும் அவரது மகன் சோபால்சிங்சோலங்கி ஆகியோர் தலையில் பலத்தகாயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹரிநாத் சிங்கிற்கு கால் எலும்பு முறிந்துள்ளது.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக, ஆதிக்க சாதி வெறியர்களான நாராயண் சிங் செந்தவ், ராஜேந்திர சிங்செந்தவ் மற்றும் விஜேந்திர சிங் செந் தவ், பைருசிங் செந்தவ், லோகேந்திர செந்தவ் மற்றும் மனோகர் செந்தவ்ஆகியோர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, பட்டியல்- பழங்குடியினருக்கு எதிரான வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 3 (1), 3 (2) ஆகியவற்றுடன் ஐபிசி 294, 323, 506 ஆகிய பிரிவுகளில் ஜவார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.