மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வய நாடு, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதி களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரே ஒரு தொகுதி யில் மட்டுமே உறுப்பி னராக இருக்க வேண் டும் என்ற விதிகளின் படி வயநாடு எம்.பி., பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியா னதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகு திக்கு நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 16 பேரில் 11 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அண்டை மாநிலங்க ளான தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர், புதுதில்லியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி, குஜராத், தெலுங்கா னா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்க ளைச் சேர்ந்த வேட்பாளர்களும் வய நாட்டில் களம் கண்டுள்ளனர். பொது வாக சொந்த மாநிலம், மாவட்டம் ஆகிய வற்றின் அடிப்படையிலேயே சட்ட மன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். ஆனால் வயநாடு இடைத்தேர்தலில் மலையாளி மக்களை விட வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் களமிறங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.