districts

img

கழிவறையை சீரமைக்க கோரிக்கை

தருமபுரி, நவ.6- தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுக் கழிவறையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. அதனருகிலேயே அப்பொழுது பொது மக்கள் பயன்பாடு மற்றும் சமுதாயகூடத்தை பயன் படுத்துவோர் நலன் கருதி, 2014 - 15 ஆம் ஆண்டில், ரூ.2.95 லட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிவறை கட்டப் பட்டது. தற்போது தண்ணீர் வசதி இல்லாததால் கழி வறை பூட்டியே கிடக்கிறது. எனவே சமுதாயக் கூடத்தை பயன்படுத்தவும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கழிவறையை சீரமைத்து, தண்ணீர் வசதி ஏற்ப டுத்தித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.