districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கென்யாவைச் சேர்ந்த 5 நபர்களிடம் விசாரணை

நாமக்கல், நவ.6- பள்ளிபாளையத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கி யிருந்த கென்யா நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார், விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் அன்னை சத்யா நகர் உள்ளது. இங்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ்  நூற்றுக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், கென்யா நாட்டைச் சேர்ந்த 5  பேர் உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக சென்னை கடவுச்சீட்டு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய  வந்தது. இதையடுத்து பள்ளிபாளையம் வந்த அவர்கள் காவல் துறையினர் உதவியுடன் விசாரணை மேற் கொண்டனர். அதில், அந்த நபர்களின் விசா காலம் முடிவ டைந்து தங்கியிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து 5  பேரும் விசாரணைக்காக சென்னை அழைத்துச் செல் லப்பட்டனர்.

கோவையில் சூயஸ் குடிநீர் திட்டத்தை ரத்து செய்திடுக  - சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் முதல்வருக்கு கடிதம்!

கோவை, நவ.6- கோவை மாநகர மக்களின் குடிநீர் விநி யோகத்தில், பேராபத்தை உருவாக்கும் சூயஸ் குடிநீர் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஎம் கோவை மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி யுள்ளனர்.  கோவை மாநகராட்சியில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப் பினர்கள் சார்பில், மாமன்றக்குழு தலைவர் வி.ராமமூர்த்தி, தமிழக முதல்வருக்கு எழுதி யுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கடந்த இரண்டு நாட்களாக கோவையில் முகாமிட்டு, கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட் டங்களை அறிவித்துள்ளமைக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறோம். மேலும், மாநகரத் தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களுக்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள் ளீர்கள். குறிப்பாக அரசுப் பள்ளிகளை பாது காக்கும் நோக்கத்தோடு பழுதடைந்த கட்டி டங்களை புதுப்பித்து கட்டுவதற்கு முன்னு ரிமை கொடுத்துள்ளீர்கள். தொடர்ந்து மாநக ராட்சியின் வளர்ச்சிப் பணியில் முழு கவ னத்தையும் செலுத்தி வருவதற்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில், கீழ்க்கண்ட பணிகளை செ திட தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகி றோம்.  மாநகரம் முழுவதும் ஒரு சில மணி நேரம் அடை மழை பெய்தால் நகரமே மழைநீர்  தேங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆட்படுகின்றனர். இவற்றை போக்க பெரும் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டப் பணிகளில், விடு பட்ட பகுதிகளையும் இணைத்து விரைந்து  முடித்துக் கொடுக்க உதவிட வேண்டுகி றோம். கோவை மாநகரத்தில் கணபதி, சரவ ணம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் கடும் போக்கு வரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. போக்கு வரத்து நெரிசலைப் போக்க வடக்கு புறவழிச் சாலைத் திட்டத்தை அமலாக்கிடவும், மேலும் மாநகரில் உள்ள சாலைகளில் தேவையான மாற்றங்கள் செய்து போக்குவரத்து நெரி சலை குறைப்பதற்கு தாங்கள் உதவிட வேண் டும். கடந்த அஇஅதிமுக ஆட்சியில் கோவை  மாநகரப் பகுதியின் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரித்தல் பணிகள் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு 25 ஆண்டு  காலத்திற்கு விடப்பட்டது. சட்டமன்ற தேர் தல் பிரச்சாரத்தில் தாங்கள் துடியலூரில் பேசு கின்ற போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சூயஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று  வாக்குறுதி கொடுத்தீர்கள். சூயஸ் ஒப்பந் தத்தை ரத்து செய்வது உங்கள் சிறப்பான ஆட்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும். மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் கீழ்நிலை  ஊழியர்களான தூய்மைப் பணியாளர்கள்  உள்ளிட்ட பணியிடங்களில் ஒப்பந்த முறையை கைவிட்டு, நிரந்தர ஊழியர்களை நிரப்ப வேண்டுகிறோம். கோவை மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள குடிசை பகுதியில் வசிக்கின்ற ஏழை குடும்பங்களை சார்ந்த வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்பின் வைப்புத் தொகையாக ரூ.250/-ஐ மட்டும்  வசூலித்துக் கொண்டு குடிநீர் இணைப்பு வழங்கலாம் என மாமன்றத்தில் தீர்மானிக் கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண் டும்.  கோவை மாநகராட்சியில் வீட்டு வரி, வணிக கட்டிட வரி, தொழில் நிறுவன கட்டிட வரி உள்ளிட்டவை மிகவும் கூடுதலாக உள் ளது. உதாரணமாக சென்னை மாநகராட்சி யில் வீட்டு வரி சதுரடிக்கு ரூ.2.15 மட்டுமே  வசூலிக்கப்படுகிறது. ஆனால், கோவையில் சதுரடிக்கு ரூ.4.00, வீதம் வசூலிக்கப்படுகி றது. மேலும் குப்பை வரியும் வசூலிக்கப் படுகிறது. இத்தோடு ஒவ்வொரு ஆண்டும் அடிப்படை வரியில் 6 சதவிகித வரி உயர்வு செய்யப்படுகிறது. இதன் காரணமாக மக்கள்  கூடுதலாக வரி செலுத்த கூடிய சூழல் உரு வாகி உள்ளது. தாங்கள் ஆட்சி மீது எதிர்ப்பு  மன நிலையில் உள்ளனர். எனவே, கூடுத லாக உள்ள வரியை சீராய்வு செய்து குறைப்ப தற்கு சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட  வேண்டும். மேலும், கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்திலும் பட்ஜெட் கூட்டத்தி லும் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றபடாமல் உள்ளது. அவற்றை நிறைவேற்ற உதவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.10 முதல் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்!

நாமக்கல், நவ.6- நாமக்கல், முதலைப்பட்டியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ.10 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதென, மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரி வித்துள்ளார். நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் புதிதாக கட் டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் ச.உமா பேசுகையில், முதலைப் பட்டியில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை கடந்த அக்.22 ஆம் தேதியன்று முதல்வர் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திற்கு அனைத்து  புறநகர் பேருந்துகளும் முழுமையாக பொதுமக்களுக்கு சிரம மின்றி மாற்றப்பட வேண்டும். பேருந்து நேர விவரங்கள் திரை யிட வேண்டும். விபத்துகளை தவிர்க்க பேருந்து நிலையத் தில் ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப வேகத்தடையினை அமைக்க வேண்டும். மக்கள் பயன்படும் வகையில் பேருந்து நிறுத்தத்திற்காக அண்ணா சாலை, கோஸ்டல் சாலை, வள்ளிப்புரம் சாலை ஆகிய இடங்களில் 5 பயணி கள் நிழற்குடை அமைக்க வேண்டும். பழைய பேருந்து நிலை யத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல 10 நிமிடத் திற்கு ஒரு முறை என அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 117  நடைகள் தினசரி இயக்கப்படும். பழைய பேருந்து நிலையம்  முதல் புதிய பேருந்து நிலையம் வரை நகர பேருந்து கட்ட ணம் ரூ.7 ஆகவும், புறநகர் பேருந்தின் சாதாரண கட்டணம்  ரூ.7 ஆகவும், விரைவு பேருந்து கட்டணம் ரூ.10 ஆகவும் நிர்ண யம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையிலிருந்து, சேலம் சாலை திரும்பி வந்து புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். இதன்படி, நவ.10 ஆம் தேதி முதல் நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட வுள்ளது, என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, வருவாய்  கோட்டாட்சியர் ஆர்.பார்த்தீபன், மாநகராட்சி செயற்பொறி யாளர் ஆ.சண்முகம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தன் ராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருப்பூர், நவ.6- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் கீழ்  செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் செயல்பாடுகள்  குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் புதனனறு  நடைபெற்றது.  இவ்ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்தாவது, மகளிர் திட்டத்தில் விடுபட்ட மகளிரை குழுவாக அமைத்தல் மற்றம் இணைத்தல், மகளிர் சுய உத விக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு பெறுதல், வாழ் வாதாரப்பணிகள், (பண்ணை மற்றும் பண்ணை சாரா பணி கள்) மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உற்பத்திப் பொருட்களை  சந்தைப்படுத்துதல், முதலமைச்சரின் காலை உணவுத்திட் டம், இளைஞர்கள் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் நகர்புற வாழ்வாதாரத் திட்டம் ஆகிய திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்தாண்டு செயல்படுத்தப் பட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின்  செயல்பாடுகள் குறித் தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மகளிர் திட்டத்தில் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் பொது மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்பு ணர்வு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக, விளிம்பு நிலையில்  உள்ள மக்களுக்கு இத்திட்டங்களை கொண்டு சேர்த்திட அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். மேலும், தமிழக அரசின் சார்பில் மகளிர்  திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்ட  பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகை யில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு  நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவ ரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரி வித்தார்.  இதில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகு மார், உதவி திட்ட அலுவலர்கள் பாஸ்கரன், பாஸ்கர், சம்பத்கு மார், கௌதமன், பழனிவேல், வட்டார இயக்க மேலாளர்கள்,  வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள்  மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் அமல்படுத்த  அரசு ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

அவிநாசி, நவ.6- பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண் டும் என அவிநாசியில் நடைபெற்ற தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட  கிளை மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  அவிநாசி 15 ஆவது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை வட்ட கிளைத் தலைவர் சின்ராஜ் தலை மையேற்று நடத்தினார். இதில், மாவட்ட  இணைச் செயலாளர் ராமன் துவக்கி வைத்து பேசினார். அமைப்பின் வட்ட  கிளைச் செயலாளர் கருப்பன் வேலை அறிக்கையை முன்வைத்தார். வட்ட கிளைப் பொருளாளர் சௌந்தரம் வரவு  செலவு அறிக்கை முன் வைத்தார். தமிழ் நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம்  வட்ட கிளைப் பொருளாளர் சண்முகம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க  வட்ட கிளைத் தலைவர் கண் ணன், சிஐடியு அவிநாசி பொதுத் தொழி லாளர் சங்கச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசி னார்கள். இதில், புதிய நிர்வாகிகளாக  வட்ட கிளைத் தலைவர் சின்ராஜ், வட்ட  கிளைச் செயலாளர் கருப்பன், வட்ட கிளைப் பொருளாளர் கண்ணன் உட்பட ஒன்பது பேர் கொண்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்  தொடர்ந்து அமைப்பின் மாவட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியன் நிறைவுரை யாற்றினார்.  இதில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். கருணை அடிப்படை யில் பணி நியமனம் 25 சதவீதம் வழங் கப்பட்டு வந்ததை தமிழக அரசு 5 சதவீ தமாக குறைந்து வெளியிட்ட அரசா ணையை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.