கோவை, நவ.6- மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதனன்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முத லமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடு களை நேரில் பார்வையிட்ட அமைச்சர், மாணவர்களு டன் கலந்துரையாடி, அவர்களது கல்வி நிலை குறித்து கேட்டறிந்தார். பள்ளியின் கட்டமைப்பு வசதிகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றையும் ஆய்வு செய் தார்.