districts

img

குப்பை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா!

சேலம், நவ.6- அரசுப்பள்ளி அருகே குப்பை சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர் கள் பெற்றோர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள வீராணம் பெருமானூர் காட்டுவளவு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் வீராணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி  பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் அருகே சேலம் மாநகராட்சி சார்பில், குப்பை சுத்திக ரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குப்பை சுத்திக ரிப்பு நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி யும் வகுப்புகளை புறக்கணித்த மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் பள்ளி முன்பு புதனன்று தர்ணாவில்  ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வீராணம் காவல்  துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், குப்பை  சுத்திகரிப்பு நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவ டிக்கை எடுக்க உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக் கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதனையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு திரும்பினார்.