ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் இருந்த பொழுது ரிங்ரோடு (சுற்றுச் சாலை) ஊழல் வழக்கில் சந்திரபாபு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு பழிவாங் கல் என்ற பெயரில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, சந்திரபாபு முதல்வராக ஆன பின்பு, ஜெகன் மோகனை குறிவைத்து பல்வேறு நெருக்கடிகளை தொ டுத்து வருகிறார். மக்கள் நலன் சார்ந்த பணிகளை விட தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி அரசு ஜெகன் மோக னையும், அவரது ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் கட்சியை ஒடுக்கவே தீவிரமாக பணியாற்றி வருகிறது. இத்தகைய சூழலில் அரசியல் ஆதாயத்திற்காக ஜெகன் மோகனின் குடும்பப் பிரச்ச னையிலும் தலையிட்டு அவமானப் பட்டுள்ளது தெலுங்கு தேசம் கட்சி.
விஜயம்மா எச்சரிக்கை
கடந்த 2019இல் ஜெகன் மோகன் சித்தப்பா விவேகானந்தா கொலை செய்யப்பட்டார். இதே போல கடந்த 2022ஆம் ஆண்டு ஆந்திர மாநி லம் கர்னூலில் இருந்து ஹைதராபாத் நோக்கி காரில் விஜயம்மா பயணம் செய்தார். அப்போது திடீரென காரின் 2 டயர்களும் வெடித்தன. இதில் டிரை வரின் சாதுர்யம் காரணமாக விஜயம் மாவுக்கு எவ்வித காயமும் ஏற்பட வில்லை.
இந்த 2 புகைப்படங்களையும் பதி விட்டு,”ஜெகன்மோகன் தனது அர சியல் ஆதாயத்திற்காக சித்தப்பா விவேகானந்தாவை கொலை செய்து, தனது தாயை விபத்தில் சிக்க வைக்க முயன்றார்” என தெலுங்கு தேசம் கட்சி சமூகவலைத்தளங்களில் பதி விட்டு இருந்தது. இந்த விவகாரம் தற் போது இணையத்தில் டாப் டிரெண்டி ங்கில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜெகன் மோகனின் தாயார் விஜயம்மா,”அரசியல் ஆதா யத்திற்காக குடும்பப் பிரச்சனையில் தலையிட வேண்டாம்” என தெலுங்கு தேசம் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்தபடி விஜயம்மா வெளியிட்ட வீடியோவில்,”உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமா னாலும் பேசலாம், எழுதலாம் என இருக்காதீர்கள். எங்கள் வீட்டு சொத்துப் பிரச்சனை, அண்ணன், தங்கை பிரச்சனை இவையெல்லாம் எங்கள் குடும்பப் பிரச்சனை. இதில் நீங்கள் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். எப்போதோ நடந்த கார் விபத்தை இப்போது வைரலாக்கி வருகிறீர்கள்.
எனது மகன் ஜெகன்மோகனை தேவையின்றி குற்றம் சாட்டுகிறீர்கள். எனது மகன், என்னை ஏன் கொலை செய்ய வேண்டும்? எனது பேரனுடன் சில நாட்கள் தங்குவதற்காகத்தான் அமெரிக்கா வந்துள்ளேன். ஆனால் ஜெகன்மோகனுக்கு பயந்து அமெ ரிக்காவில் தங்கியிருப்பதாக கூறி வருகிறீர்கள். எனது மகன் மற்றும் மகளை சரியாகத்தான் வளர்த்துள் ளேன். அவர்கள் அரசியல் வாழ்க்கை யிலும் சரி, குடும்பத்திலும் சரி நேர்மை யாகத்தான் வாழ்கின்றனர். எனவே தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். மீறினால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்” என தெலுங்கு தேசம் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.