states

img

கே போனைத் தொடர்ந்து வித்யாஸ்ரீ திட்டம் தொடங்கியது.... 14 மாவட்டங்களில் 200 மாணவர்களுக்கு மடிக்கணினி....

திருவனந்தபுரம்:
கே போன் மூலம் இணையத் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர் களுக்கும் மடிக்கணினிகள் கிடைக்கச் செய்வதற்கான மாநிலத்தின் பெருமைமிக்க முயற்சியான வித்யாஸ்ரீ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமடிக்கணினி விநியோகத்தை முதல்வர்பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.14 மாவட்டங்களில் 200 மாணவர் களுக்கு வெள்ளியன்று விநியோகிக்கப் பட்டது.

வித்யாஸ்ரீ திட்டம் என்பது மடிக் கணினிகளை வருவாய்க்கு இணங்க அனைவருக்கும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் டிஜிட்டல் இடைவெளிகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். பொருளாதார சிரமம் உள்ளவர்களுக்கு அரசு உதவி வழங்கியும் கேஎஸ்எப்இ சீட்டு மற்றும் குடும்பஸ்ரீ ஆகியோருடன் ஒத்துழைத்து நன்மைகளை வழங்குவதன் மூலம்மடிக்கணினிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் வழி வகுத்து வருகிறது. இதுவரை, 1,44,000 பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 60,816 உறுப்பினர்கள் மடிக்கணினிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வித்யாஸ்ரீ திட்டத்தின் மூலம் 10 லட்சம் குடும்பங்களுக்கு மடிக்கணினிகள் சென்றடையும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கோவிட் உருவாக்கிய கற்றல் தடையின்பின்னணியில் இது நாட்டில் ஒரு மாதிரிதிட்டம் என்றும் முதல்வர் கூறினார்.ஆன்லைன் கற்றலின் உலகளாவியசூழலில், சாதாரண மனிதர்களின் குழந்தைகளுக்கு மடிக்கணினிகளை மலிவு விலையில் உருவாக்கி வழங்குவது முக்கியம். உலகளாவிய இணைய உரிமைகளின் வருகையுடன், ஒரு அறிவு சமூகமாக முன்னேறுவதற்கான பின்னணி முழுமையாக தயாரிக்கப்படும். கே போன் கேரளாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இணையத்தை உறுதி செய்யும். கல்வி, அறிவுஉருவாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம்,நாட்டில் முன்னேற்றம் ஆகியவற்றை முழுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டும் விரிவான திட்டத்தின்தொடர்ச்சியே வித்யாஸ்ரீ திட்டமாகும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் தாமஸ் ஐசக் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஏ.சி மொய்தீன், சி.ரவீந்திரநாத், வி.கே.பிரசாந்த் எம்.எல்.ஏ, கேஎஸ்எப்இ நிர்வாக இயக்குநர் வி.பி. சுப்பிரமணியன், குடும்பஸ்ரீ மாநில திட்ட மேலாளர் டாக்டர். ஷமீனா, குடும்பஸ்ரீ நிர்வாக இயக்குநர் எஸ்.ஹரிகிஷோர், உள்ளாட்சி செயலாளர் சாரதா முரளீதரன், ஐ.டி கூடுதல் செயலாளர் முகமதுஒய்.சபிருல்லா ஆகியோர் பேசினர். மடிக்கணினிகளைப் பெற்ற மாணவர்கள் விழாவில் அந்த மடிக்கணினி மூலம் முதல்வருடன் உரையாடினர்.

திட்டத்தில் சேர கால அவகாசம்
குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் மடிக் கணினிகளுக்காக கேஎஸ்எப்இ சீட்டில்சேரலாம். 30 மாதங்களுக்கு மாதம் ரூ.500 வீதம் தவறாமல் பணம் செலுத்துபவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கு பணம் செலுத்தியபிறகு மடிக்கணினியைப் பெறலாம். ஏழை குடும்பங்கள் ரூ .7,000 க்குமடிக்கணினி பெறலாம். கடனுக்கான ஐந்து சதவிகித வட்டி அரசாங்கமும், நான்கு சதவிகிதம் கேஎஸ்எப்இயும் சம்பந்தப்பட்ட துறையின் முடிவுப்படி பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி மற்றும் மீன்பிடி குடும்பங்களுக்கு மற்றொரு மானியம் கிடைக்கும். முன்னேறிய சமூகத்தில் பின்தங்கியோருக்கு மானியம் வழங்கப்படும்.கோகோனிக்ஸ், லெனோவா, ஹெச்பி மற்றும் ஏசர் மடிக்கணினிகளில் விருப்பமானதை தேர்வு செய்யலாம்.