tamilnadu

img

திருப்பூரில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவிகள் சாலைமறியல்

திருப்பூர், நவ. 30-  திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் னாள் மாணவிகள், இலவச மடிக்க ணினி வழங்க வலியுறுத்தி காங்கயம் சாலையில் சனியன்று மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் காங்கயம் சாலையில் அரசுப் போக்குவரத்து பேருந்து பணி மனை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கூறியதாவது:   திருப்பூர் பழனியம்மாள் மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2017-18 மற்றும் 2018-19 ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தோம். எங்களில் 300 பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. கடந்த 27 ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். பள்ளி யின் ஆசிரியர்கள் இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னார்கள். சனி யன்று காலை பள்ளிக்கு சென்றதற்கு, ஆவணங்கள் கோரினர். பள்ளியின் முன்னாள் மாணவி கள் நாங்கள்தான். ஆனால் வேண்டு மென்றே காலதா மதம் செய்வதற்காக ஆவணங்களை கேட்டு இழுத்தடிக் கிறார்கள். ஆகவே பள்ளியை முற்றுகை யிட்டு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டோம் என்றனர்.  

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர்  மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பழனி சாமி, தெற்கு வட்டாட்சியர் மகேஷ்வ ரன் ஆகியோர் மாணவிகளை சமா தானப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் சிலரை வருவாய்  அலுவலர் சுகுமார் சந்தித்து பேசி னார். அப்போது, கோரிக்கையை மனுவாக எழுதித்தரும்படி வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.  திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பழனிசாமி கூறுகையில், 2018-19 ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வந்துள்ளது. ஆனால் பள் ளிப்படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் படிப்பை தொடர்பவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினி வழங்குவது தொடர்பாக, எவ்வித தகவலும் எங்க ளுக்கு வரவில்லை. ஆகவே இது தொடர்பாக அரசுக்கு விளக்கம் கேட் கப்பட்டுள்ளது. தகவல் வந்ததும் தந்துவிடுவோம். ஆகவே இந்த மாண விகளுக்கு தாமதமாகிறது என்றார்.