states

img

கேரளாவில் ரயிலில் தீ வைத்தவர் கைது!

கேரளாவில் விரைவு ரயிலில் பெண் பயணி மீது தீ வைத்த நபரை உத்திரப்பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
 கேரள மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் இடையே செல்லும் ரயிலில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் கோழிக்கோடு ஸ்டேசனிலிருந்து புரப்பட்டபோது ரயிலில் இருந்த சக பெண் பயணி மீது திடீரென ஒரு மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பித்து ஓடிவிட்டார்.இதில் உயிர் தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த இரண்டரை வயது குழந்தை உள்பட 3 பேர் பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்
.ரயில் தீ விபத்தில் சந்தேகிக்கும் நபர் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக புலனாய்வு குழு அதிகாரிகள் நொய்டா விரைந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு விரைந்தனர். கேரள புலனாய்வுக் குழு நொய்டா சென்றிருந்த நிலையில் ஷாருக் சைபி உத்திரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.  
தற்போது அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்