பழனி
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி மக்கள் நலப்பிரதிநிதிகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 25 எம்எல்ஏ-க்கள் மற்றும் 2 எம்பி என தமிழகத்தில் மொத்தம் 27 மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழநதார். மற்ற நபர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபப்பட்டுள்ள நிலையில், மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.