திருவனந்தபுரம்:
கேரளத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளத்துக்கு பெருவெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய நீர் ஆணையம். கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் முதல் காசர்கோடு வரை உள்ள மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட் டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று வங்காள விரிகுடா கடலின் உட்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகலாம் என்கிறமுன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட் டுள்ளது. மழை வலுவடைந்ததைத் தொடர்ந்து மலைப்பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.
கேரளம் உட்பட பத்து மாநிலங்களுக்கு வெள்ள அபாயம் உள்ளதாகமத்திய நீர் ஆணையம் முன்னெச்சரிக்கை அளித்துள்ளது. இடுக்கி, இடமலையாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாலக்காடு பவானி ஆற்றில் அபாய நிலை அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு செய்யப் பட்டுள்ளது. கோழிக்கோடு இருவாஞ்சிபுழா மற்றும் சாலியார் நதிகள் நிரம்பி வழிகின்றன, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவீடுகளில் இருந்து மக்கள் வெளியேற் றப்பட்டுள்ளனர். செம்ப கடவு பாலம்மூழ்கியதைத் தொடர்ந்து துஷாரகிரியின் அடிவாரத்திற்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள கடற்கரையில் காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வரை இருக்கக்கூடும் எனவும், மீன் தொழிலாளர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் தேசிய பேரிடர் நிவாரணப்படையின் ஆறு குழுக்கள் வியாழனன்று கேரளத்துக்கு வந்தன.
நிலம்பூரில் அபாய நிலை
ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ரெட் அலர்ட் உள்ள வயநாட்டில் மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடிபுத்துமலை பகுதியில் 390 மி.மீ. மழைபெய்தது. ஆபத்தான பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தி மக்கள் மாற்றுஇடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் 16 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.நிலம்பூர் முண்டேரியில் உள்ள மரப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வாணியம்பலம், கும்பலப் பாரா மற்றும் தாரிபொட்டி காலனிகள்மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுஇருளில் மூழ்கி தனிமைப்படுத்தப்பட் டுள்ளன. கடந்த வெள்ளத்தின்போது பாலம் அடித்துச் செல்லப்பட்ட பின் னர் கட்டப்பட்ட மூங்கில் பாலம் மீண்டும்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட் டது. கனமழையில் சாலியாறிலும் போஷகநதியிலும் வெள்ளம் கரைகடந்ததைத் தொடர்ந்து நிலம்பூர் தாலுகாவில் 7 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. 105 குடும்பங்களிலிருந்து பெண்கள் குழந்தைகள் உட்பட 410 பேர் முகாம் களில் தங்க வைக்கப்பட்டனர். முண் டக்கடவு, நெடுங்கயம் ஆதிவாசி காலனிகளிலிருந்து 153 நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவசர நிலையை எதிர்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும்கட்டுப்பாட்டு அறை (04931 221471)தாலுகா அலுவலகத்தில் திறக்கப்பட்டது.