கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக-வை சேர்ந்த பிரசாந்த் உட்பட 10 பேருக்கு, 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலசேரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு, தலசேரி நகராட்சியின் அப்போதைய கவுன்சிலரான சிபிஎம் கட்சியை சேர்ந்த பி.ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மீது பிரசாந்த் மற்றும் சில பாஜக-ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கின் விசாரணை கடந்த 18 ஆண்டுகள் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கேரள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக-வை சேர்ந்த பிரசாந்த் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என தலசேரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளிகளான பிரசாந்த் (49), ராதாகிருஷ்ணன் (54), ராதாகிருஷ்ணன் (52), பி.வி.சுரேஷ் (50); என்.சி.பிரஷோப் (40); உன்னி என்கிற ஜிஜேஷ் (42); முத்து என்கிற கே.சுதீஷ் (42); பிரஜோதி என்கிற பிரஜீஷ் (45); ஓ.சி.ரூபேஷ்; மற்றும் மனோஜ் (40) ஆகியோருக்கு தலா 36.6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,08,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
