புதுதில்லி:
முஸ்லிம் லீக் தலைவர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி மக்களவையில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமாவை மக்களவை சபாநாயகர் அறைக்கு சமர்ப்பித் தார்.
பி.கே. குஞ்ஞாலிக்குட்டி மலப்புரம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அடுத்த ஓரிரு மாதங்களில் நடக்கவிருக்கும் கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார்.2016 இல் வேங்ஙரா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு வந்தார்.குஞ்ஞாலிக்குட்டி எம்எல்ஏவாக இருந்தபோது மலப்புறம் மக்களவை உறுப்பினராக இருந்த இ.அகமது மறைந்தார். அதைத் தொடர்ந்து 2017இல் நடந்த இடைத்தேர்தலில் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2019 பொதுத் தேர்தலில் மலப்புறத்தில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். மீண்டும் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக எம்.பி. பதவியைராஜினாமா செய்துள்ளார்.