மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டயம் மாவட்டச் செயலாளரும், கேரள மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் ஏ.வி.ரசல் (62) உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலமானார். இத்தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ரசல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.