சென்னை,மே.24- கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள கேரள முதல்வர், அன்புத் தோழர் பினரயிவிஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கான நிர்வாகத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பும், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மைக்கான எங்கள் அர்ப்பணிப்பும் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான பிணைப்பை வலுப்படுத்துகிறது.
இரு மாநிலங்களும் ஒன்றாக நின்று கலாச்சார உறவுகளையும் பொது நலன்களையும் கொண்டாடட்டும். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் விரும்புகிறேன்.