ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம் என மலையாள ஊடகம் ஒன்றுக்கு பாஜக எம்.பி சுரேஷ் கோபி பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பளர்களில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி. இவர், நேற்று ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்று கொண்டார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமானம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து, மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து சுரேஷ் கோபி, தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம் என கூறியது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், தான் ஏற்கனவே படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இணையமைச்சர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.