ஒன்றிய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மக்களவைத் தோ்தலில் திரிச்சூா் தொகுதியில் பாஜக சாா்பில் சாா்பில் சுரேஷ் கோபி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவருக்கு ஒன்றிய இணையமைச்சா் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தோ்தலுக்கு முன்பு ஏப்ரல் மாதம் திரிச்சூரில் நடைபெற்ற பூரம் விழாவில் பங்கேற்பதற்காக சேவா பாரதி அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சுரேஷ் கோபி வந்து இறங்கியுள்ளார்.
வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸில் வந்து சுரேஷ் கோபி இறங்கியுள்ளாா். மேலும், மருத்துவ அவசரப் பயன்பாட்டுக்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை அவா் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது திரிச்சூர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.