கேரளம்,நவம்பர்.12- கேரளாவில் மதம் சார்ந்த வாட்ஸ் ஆப் குழு தொடங்கிய புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மல்லு இந்து அதிகாரிகள் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு ஆரபித்து அதில் சக அதிகாரிகளை இணைத்ததோடு, மதம் சார்ந்த கருத்துக்களை பதிவிட்ட விவகாரத்தில் கே.கோபாலகிருஷ்ணன், என் பிரசாந்த் ஆகிய 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளத்தின் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.