கர்நாடகாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தந்தையே ஆணவப்படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூபள்ளி தாலுக்கா இனம் வீரபுரா கிராமத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததற்காக, 20 வயது கர்ப்பிணி பெண் மண்யா பாட்டிலை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தாக்கிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் அவரது மாமனார், மாமியாரும் காயமடைந்துள்ளனர்.
கோடரி மற்றும் இரும்புக் குழாய் போன்ற ஆயுதங்களால் நடந்த தாக்குதலில் மண்யா கடுமையாக காயமடைந்து, டிசம்பர் 22 அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது.
இந்த வழக்கில் மண்யாவின் தந்தை பிரகாஷ் பாட்டில் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
