states

img

ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசல் - 7 பேர் உயிரிழப்பு

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது பெங்களூரு அணி. 18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுள்ளது பெங்களூரு அணி. இந்த நிலையில், இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.