கடந்த வாரம் கர்நாடக பாஜக மாநில தலைவர் பி.ஒய்.விஜ யேந்திரா,“ஊழல் மட்டுமே கர் நாடகாவில் உள்ளது. ஒன்றரை ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச் சியும் ஏற்படவில்லை” என கூறினார். இதற்கு பதிலளித்த கர்நாடகா முதல்வர் சித்தராமை யா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”பி.ஒய்.விஜயேந்திரா அவர்களே என்னுடன் விவாதம் செய்வ தற்கு முன், உங்கள் சொந்தக் கட்சித் தலை வர்களான பசனகவுடா பாட்டீல் யத்னல், ரமேஷ் ஜார்கிஹோலி ஆகியோருடன் முதலில் ஒரு சுற்றாவது விவாதம் செய் யுங்கள். உங்கள் தந்தை எடியுரப்பா வை முதல்வராக்க பாஜக மேலிடத்துக்கு ரூ.2000 கோடி கொடுத்துள்ளீர்கள். இன் னும் சில கோடி ரூபாயைக் கொடுத்து நீங்கள் கட்சித் தலைவராகியுள்ளீர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.