states

img

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரம்!

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான 2-ஆம் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 54% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இத்தேர்தலில் 61.38 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர், புத்காம், கந்தர்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளுக்காக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவு விவரங்களை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 54% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.