states

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் ‘370’ ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்!

ஸ்ரீநகர், நவ. 6 - சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரு வதற்கான தீர்மானம் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ, கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று திடீரென ரத்து  செய்த ஒன்றிய பாஜக அரசு, மாநி லத்தையே, ஜம்மு - காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, குடியரசுத் தலைவர் ஆட்சி யையும் அமல்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலை யும் நடத்தாமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருந்தது.

இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அண்மையில் நடை பெற்ற தேர்தலில், பாஜக தோற்கடிக் கப்பட்டு, இந்தியா கூட்டணி ஆட்சி யமைத்தது. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா அக்டோபர் 16 அன்று முதல்வராக பதவியேற்றார்.

மறுநாளே ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், குடியரசுத் தலைவரின் ஏற்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து உமர் அப்துல்லா நேரிலும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் தான், தற்போது சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசி யலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ-வும், துணை முதல்வருமான சுரீந்தர் சவுத்ரி இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.  “ஜம்மு - காஷ்மீர் மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியல் சாசன உத்தரவாதங்களை இந்த சட்டப்பேரவை மீண்டும் வலியுறுத்து கிறது. சிறப்பு அந்தஸ்து ஒரு தலைபட்சமாக நீக்கப்பட்டது குறித்த கவலையை வெளிப்படுத்துகிறது. மறு சீரமைப்புக்கான எந்த ஒரு நட வடிக்கையும் தேசிய ஒற்றுமை மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் நியாயமான விருப்பங்கள் இரண்டையும் நிறை வேற்ற வேண்டும் என்று இந்த அவை வலியுறுத்துகிறது.

மேலும், ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதில், ஒன்றிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்”  என்று தீர்மானத்தில் தெரிவிக்கப் ட்டிருந்தது.  இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா உள்ளிட்ட பாஜக உறுப் பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோஷம் போட்டு, கூச்சல், குழப்பத் தை ஏற்படுத்தினர். இதனிடையே சபா நாயகர் அப்துல் ரஹீம் ரதேர், தீர்மா னத்தை குரல் வாக்கெடுப்புக்குவிட் டார்.

இதில், பலத்த கூச்சலுக்கு  மத்தியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள் அவையின் மையத்துக்கு வந்து கூச்சலிட்டனர். இதனால், சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். 15 நிமிடங்களுக்குப் பிறகு, அவை கூடியபோது மீண்டும் கூச்சல் ஏற்பட்டதால், சபாநாயகர் மறுபடியும் அவையை ஒத்திவைத்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பின்பு பேரவைக்கு வெளியே செய்தி யாளர்களைச் சந்தித்த முதல்வர் உமர் அப்துல்லா, “சட்டப்பேரவை தனது கடமையைச் செய்துள்ளது. இப்போது இதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.