புதுச்சேரி:
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நவ.,28 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நிவர் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரியில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு 3 நாட்களுக்கு (நவ.,28 வரை) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.