சண்டிகர் ஹரியானாவில் சீட் பிரச்சனை யால் பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் கள், எம்எல்ஏக்கள் என 30க்கும் மேற் பட்டோர் கட்சியை விட்டு ஓட்டம் பிடித் துள்ளனர். அவர்களை கட்சியிலேயே தக்க வைக்க பாஜக தேசிய தலை வர்கள் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை. பாஜகவை விட்டு விலகிய தலை வர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளில் இணைந்து வரும் நிலை யில், மேலும் ஒருவர் பாஜகவை புறந் தள்ளியுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏவும், ஹரியானா பாஜகவின் விவசாயப் பிரிவு தலைவருமான சுக்விந்தர் மண்டி பத்ரா சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கோரினார். ஆனால் பாஜக சீட் மறுக்கவே, சுக்விந்தர் மண்டி சனியன்று காங்கிரஸ் கட்சி யில் இணைந்தார். கடந்த 10 ஆண்டு களாக சுக்விந்தர் மண்டியை வைத்து தான் விவசாயிகளின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கைப்பற்றியது பாஜக. தற்போது சீட் பிரச்சனையால் சுக்விந்தர் மண்டி யும் காங்கிரஸ் கட்சியில் இணைந் துள்ளதால், என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக விழிபிதுங்கி நிற்கிறது.