குஜராத் பல்கலைக்கழக வன்முறை குறித்து உண்மையை வெளியிட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபேரின் பதிவை நீக்க குஜராத் பாஜக அரசு முயன்றுள்ளது.
குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், ஜெய்ஸ்ரீராம் கோஷங்களுடன் விடுதி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 வாகனங்களை சுக்குநூறாக நொறுக்கிவிட்டு இந்துத்துவா கும்பல் தப்பித்துச் சென்றது. இது தொடர்பான வீடியோ பதிவை பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை அவரது எக்ஸ் பக்கத்திலிருந்து நீக்க வேண்டும் என குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை மீறுவதாகக் கூறி அந்த பதிவை நீக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.