சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்திலிருந்து ஊடகவியளாலர்கள் தொடர்ந்து வெளியேறுவது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
எக்ஸ் தளத்தில் இனி பதிவிடப்போவதில்லை என பிரபல பத்திரிக்கையான தி கார்டியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது;
இனி எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ கார்டியன் கணக்குகளிலிருந்து எந்த பதிவும் பதிவிடப்படாது என்பதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். தீவிர வலதுசாரி சதி கோட்பாடுகள் மற்றும் இனவெறி உட்பட, எதிர்மறையான மிகவும் மோசமான கொள்கைகளை விளம்பரப்படுத்தும் செயல் எக்ஸ் தளத்தில் இருக்கிறது. இது ஒரு நச்சு ஊடக தளமாக செயல்படுகிறது தி கார்டியன் தெரிவித்துள்ளது.
இதைபோன்றே சிஎன்என் முன்னாள் தொகுப்பாளர் டான் லெமன் எக்ஸ் தளம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது என தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சார்லி வார்சேல், தி நியூயார்க் டைம்ஸின் மாராகே போன்றோரும் எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.