states

img

ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து – இருவர் பலி!

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐஓசிஎல்) சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகினர்.

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையில் நேற்று (நவ. 11) மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள பென்ஸீன் சேமிப்பு தொட்டி வெடித்துச் சிதறியதே, தீ விபத்துக்கான காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

முன்னதாக, மளமளவென பரவிய தீ அருகிலிருந்த பிற பகுதிகளிலும் பற்றிக் கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், இன்று (நவ.12) அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர்.

இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி ஆலையில் இருந்த இரு பணியாளர்கள் உயிரிழந்த நிலையில், அதிகாரியொருவர் தீக்காயங்களுடன் மீட்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.