“நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதை நான் விரும்பவில்லை”
ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் டிரம்ப் காட்டம்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற் பத்தியை அதிகரிக்க உள்ள நிலையில், அந்த முடிவில் தனக்கு விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக கத்தார் சென் றுள்ள அவர் அந்நாட்டின் தலைநகர் தோஹா வில் நடந்த ஒரு வணிக நிகழ்வில், டிம் குக்குடன் தனக்கு ஒரு “சிறிய பிரச்சனை” இருப்பதாக டிரம்ப் கூறினார். அவர் மேலும் பேசியதாவது “நான் அவரிடம் சொன்னேன், என் நண்பனே, நான் உங்களை மிகவும் நன்றாக நடத்துகி றேன். நீங்கள் 500 பில்லியன் டாலர்கள் சொத்தை அடைந்துள்ளீர்கள். தற்போது நீங்கள் இந்தி யாவில் உங்கள் உற்பத்தியை பெருக்க திட்ட மிட்டுள்ளது பற்றி நான் அறிந்துள்ளேன். நீங்கள் 500 பில்லியன் டாலர்கள் மதிப்பி லான முதலீட்டைக் கொண்டு வருகிறீர்கள். ஆனால் இப்போது நீங்கள் இந்தியா முழு வதும் உற்பத்தி மையங்கள் அமைக்கிறீர்கள் என்று கேள்விப்படுகிறேன். நீங்கள் இந்தி யாவில் உற்பத்தி செய்வதை நான் விரும்ப வில்லை. நீங்கள் இந்தியாவைக் கவனிக்க விரும்பினால் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யலாம். ஏனெனில் இந்தியா உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனவே இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்வது மிகவும் கடினம். நாங்கள் உங்களை நன்றாக நடத்துகிறோம், நீங்கள் பல ஆண்டுகளாக சீனாவில் தொழிற்சாலைகள் அமைத்ததை நாங்கள் பொறுத்துக் கொண் டோம். தற்போது இந்தியாவில் நீங்கள் உற்பத்தி செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. இந்தியாவே இந்தியாவை கவனித்துக் கொள்ளும்” என்று டிரம்ப் தெரிவித்தார். உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து வர்த்தகப் போரை துவங்கிய பிறகு சீனா மீது 145 சதவீத வரிகளை டிரம்ப் விதித்தார். தற்போது அது 30 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக அமெரிக்காவில் ஆப்பிள் போன்களின் விலை மிக உச்சத்தை தொட்டது. இதனால் ஆப்பிள் நிறுவனம் சீனா வில் இருந்த உற்பத்தியை வியட்நாம் மற்றும் இந்தியாவிற்கு மாற்றும் வேலையை துவங்கி யுள்ளது. எனினும் சீனாவை முழுமையாக விட்டு விட்டு இந்தியாவில் புதிய நிறுவனத்தை துவங்கு வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக இந்தியாவில் ஏற்கெனவே உள்ள ஆலைகளில் உற்பத்தியை பெருக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 2025 இல் விற்பனையாகும் ஆப்பிள் நிறுவன போன் களில் பெரும்பான்மையானவை குறிப்பாக அமெரிக்காவில் விற்பனையாகும் போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என டிம் குக் சில வாரங்களுக்கு முன் கூறியுள்ளார். இந்நிலையில் தான் டிரம்ப் இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவதில் தனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார். உலகளவில் அதிக இறக்குமதி செய்யும் நாடாக உள்ள அமெரிக்கா, பிற நாடுகளின் பொ ருட்கள் மீது வரி விதிப்பது மட்டுமின்றி அமெ ரிக்காவின் உற்பத்தியை அதிகரிக்க டிரம்ப் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அதன் படி ஆப்பிள் நிறுவனமும் அமெ ரிக்காவில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறார். எனினும் இது இத்தனை ஆண்டுகள் அமெரிக்கா முன்வைத்த தாராள வர்த்தகத்திற்கே எதிரான நடைமுறை என கூறப்படுகிறது. மேலும் டிம் குக்கிடம் அமெரிக்க பொருள்க ளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது என இந்தியா, அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் டிரம்ப் தெரி வித்துள்ளார். இந்த ஒப்பந்தம் குறித்தான அறி விப்பு வரும் வாரங்களில் வரும் என டிரம்ப் முன்பே அறிவித்திருந்தார். எனினும் இந்திய தரப்பில் இருந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.