states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மூத்த வழக்கறிஞர் வில்சன்

அரசியல் அமைப்பு சட்டம் எந்தக்கால கட்டத்திலும், எல்லா நேரத்திலும் அனைவருக்கும் உறுதுணையாக நிற்கும். மாநில அரசு கொண்டு வரும் சட்ட மசோதாக்களை ஆளுநர் மூட்டை கட்டி வைத்தாலும், அரசியலமைப்பு அதிகாரங்கள் மூலம் அந்த மசோதாவை நாங்கள் சட்டமாக்குவோம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் தெளிவாக சொல்லி இருக்கிறது. அதனால் தான் அத்தகைய அரசியல் அமைப்பு சட்டத்தை முட்டுச் சந்தில் நிறுத்தப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு.”

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

இந்தியாவின் ஆன்மா அதன் ஒற்றுமையில் அடங்கி இருக்கிறது. நாட்டுக்காக போராடி, நம் ஒற்றுமையை காத்த கர்னல்  சோபியா குரேஷி மற்றும் எண்ணற்ற இந்திய இஸ்லாமியர்களின் வீரத்துக்கு தலை வணங்குவோம்.

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே 142 பில்லியன் டாலர்களுக்கு ஆயுத வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. சிரியா மீதான பொருளாதார தடையை நீக்க டிரம்ப் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் காசா குறித்து ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. இனி இதுதான் உலக அரசியல்! இந்தியா-பாகிஸ்தான் சண்டையை வணிகத்தைக் காட்டி நிறுத்தியதாக இந்தப் பின்னணியில்தான் டிரம்ப் பேசியிருக்கிறார். அமைதி, சமாதானம் ஆகியவற்றிலும் இனி வணிகம்தான் முன்னுரிமை பெறும்.