குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 9-ந் தேதி வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
திரௌபதி முர்முவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது யஷ்வந்த் சின்ஹாவிற்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.